» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திக்குறிச்சி கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலை மீட்பு : பெண் உட்பட நான்கு பேர் கைது

வியாழன் 5, டிசம்பர் 2019 7:42:36 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியில் பிரசித்திபெற்ற மகாதேவர் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்டு, கேரளாவில் பதுக்கி வைத்திருந்த, ஐம்பொன் சிலையை மீட்ட போலீசார், இது தொடர்பாக ஒரு பெண் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதி மகாதேவர் உற்சவ மூர்த்தி ஐம்பொன்சிலை, உள்ளிட்ட சிலைகள், கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக திருவனந்தபுரம் பீமா பள்ளியைச் சேர்ந்த ஷா நவாஸ் என்பவனை போலீசார் கைது செய்தனர். அவர் தனது நண்பன் உசேன், தோழி சுமிதா ஆகியோருடன் சேர்ந்து, சிலைகளை திருடி கேரளாவுக்கு தப்பிச் சென்றதும், அவற்றை புராதன பொருள் விற்பனையாளரான சதிஷ் பாபுவுக்கு பேரம் பேசி விற்றதும் தெரிய வந்தது.இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்துவதற்காக சதீஷ்பாபு பதுக்கி வைத்திருந்த சிலைகள் மீட்கப்பட்டன. கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory