» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை: ரயில்வே வாரிய தலைவர் பேச்சு

வெள்ளி 6, டிசம்பர் 2019 8:54:30 AM (IST)

ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என சென்னையில் நடந்த மாநாட்டில் ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்தார்.

சென்னை பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் அகில இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 95-வது தேசிய மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு ரயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் யாதவ் தலைமை தாங்கினார். ரயில்வே வாரிய உறுப்பினர் மனோஜ் பாண்டே, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ், ஐ.சி.எப். பொதுமேலாளர் ராகுல் ஜெயின், அகில இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொது செயலாளர் சிவகோபால் மிஸ்ரா, செயல் தலைவர் என்.கண்ணையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மாநாட்டில் ரயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் யாதவ் கூறியதாவது: இந்திய ரயில்வே ஒரு குடும்பம். இந்தியாவின் அனைத்து இடங்களிலும், இந்த குடும்பத்தினர் இருக்கின்றனர். ராணுவத்துக்கு அடுத்தபடியாக ரயில்வே ஊழியர்கள் தான் 24 மணிநேரமும் வேலை செய்கின்றனர். ரயில்வே மந்திரி பியூஷ்கோயல் நாடாளுமன்றத்தில் ரயில்வேயை தனியார் மயமாக்கமாட்டோம் என கூறியுள்ளார். பின்னர் ஏன் அனைவரும் தனியார் மயம் பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர். ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டமில்லை. இந்திய ரயில்வேயில் 20 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த ஆண்டில் கூடுதலாக 4 ஆயிரம் ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

இதில் பயணிகள் அதிகம் பயணிக்கும் சில ரயில்களில் வழங்கப்படும் வர்த்தக சேவைகள் மட்டும் தனியாருக்கு வழங்கப்பட உள்ளது. ரயில் இயக்கம் தொடர்பான எதுவும் தனியாருக்கு வழங்கப்படவில்லை. சேவைகளை தனியாருக்கு வழங்குவதற்கு முன்பு ரயில்வே ஊழியர் சங்கங்களிடம் கருத்து கேட்டு தான் முடிவு செய்யப்படும். தற்போது ரயில்வே கட்டமைப்புகளை மேம்படுத்தவே நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ரயில்வே ஊழியர் சம்மேளனத்தின் செயல் தலைவர் என்.கண்ணையா பேசினார். இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory