» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மிகப்பெரிய விபத்திலிருந்து தப்பிய மும்பை எக்ஸ்பிரஸ் : ஆரல்வாய்மொழியில் பரபரப்பு

வெள்ளி 6, டிசம்பர் 2019 10:50:48 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே வீசிய பலத்த சூறாவளி காற்றால் ரயில்வே மின் வயர் அறுந்து விழுந்தது. இதில் அந்த வழியாக வந்த மும்பை எக்ஸ்பிரஸ் தப்பியது.

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மதுரை வழியாக செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ் இன்று காலை புறப்பட்டு ஆரல்வாய்மொழி பகுதியில் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அதிகாலை அங்கு பலத்த சூறாவளி காற்று வீசியதால் அந்த பகுதியில் உள்ள காற்றாலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சுபாஷ் நகர் பகுதியில் மும்பை எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தபோது திடீரென என்ஜினின் மேல் பகுதியில் உள்ள மின் வயரில் இருந்து தீப்பொறிகள் கிளம்பி வெடி வெடிப்பது போல் சத்தம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ரயில் என்ஜின் டிரைவர் வண்டியை நிறுத்தியுள்ளார். பின்னர் என்ஜின் டிரைவர் கீழே இறங்கி மின் வயரை பார்த்தபோது அது சூறாவளி காற்றினால் துண்டிக்கப்பட்டு விலகி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

இதையடுத்து அவர் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை நிறுத்தி மின் வரை சரி செய்துள்ளனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தை பார்த்த ரயில்வே துறை ஊழியர்கள் மின் வயர் அறுந்து ரயில் என்ஜின் மீது விழுந்து இருந்தால் மிகப்பெரிய விபத்து நடந்திருக்கும். எஞ்சின் டிரைவர் ரயிலை துரிதமாக செயல்பட்டு நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பி உள்ளனர் என்று தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை ரயில் நிலையத்திலும் கோவை பயணிகள் ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் குருவாயூர் சென்னை ரயில் தோவாளை திருமலைபுரத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் இன்று காலை 2 மணி நேரம் தாமதமாக அனைத்து ரயில்களும் புறப்பட்டுச் சென்றன. 

இதேபோல் ஆரல்வாய்மொழி பகுதியில் நாகர்கோவில் திருநெல்வேலி சாலையில் மரம் விழுந்ததால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை அறிந்த நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரக்கிளையை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் ஆரல்வாய்மொழி பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory