» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை: என்கவுன்ட்டருக்கு பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு

வெள்ளி 6, டிசம்பர் 2019 11:55:50 AM (IST)

தெலங்கானா பெண் மருத்துவர் கொலையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதை நல்ல செயலாக பார்ப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

கால்நடை பெண் மருத்துவரான பிரியங்கா ரெட்டி (27), கடந்த மாதம் 28-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வந்தநிலையில், இன்று அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதை நல்ல செயலாக பார்க்கிறேன். இதேபோன்று கடினமான தண்டனையை குற்றவாளிகளுக்கு தர வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுத்தால் தான் வருங்காலங்களில் பெண்கள் பாதுகாப்பாக எங்கும் செல்ல முடியும் என்றார். 


மக்கள் கருத்து

shafiDec 6, 2019 - 02:42:00 PM | Posted IP 108.1*****

குட் புனிஷ்மென்ட் டிடி எ கிரேட் திங்.

மக்கள்Dec 6, 2019 - 12:11:28 PM | Posted IP 173.2*****

வாழ்த்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory