» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிஎஸ்என்எல் செல்போன் சேவையில் 3திட்டங்கள் வாபஸ்: திடீரென வேலிடிட்டி குறைப்பு

சனி 7, டிசம்பர் 2019 10:56:04 AM (IST)

பிஎஸ்என்எல் நிறுவனம் திடீரென இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியை குறைத்த கையோடு, மூன்று அட்டகாசமான திட்டங்களையும் வாபஸ் பெற்றுள்ளது.

அன்மையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் தங்களின் விலைகளை உயர்த்தி புதிய திட்டங்களை அறிவித்தது, இதற்கு நாடு முழுவதும் அதிகளவு விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டது. குறிப்பாக ஏர்டெல், ஜியோ கட்டண உயர்வுக்கு சற்று விமர்சனம் அதிகமாகத்தான் உள்ளது. இந்நிலையில் அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய கட்டணங்களை எப்போது அறிவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், திடீரென இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியை குறைத்த கையோடு, மூன்று அட்டகாசமான திட்டங்களையும் வாபஸ் பெற்றுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் ஜியோ நிறுவனம் தனது சாசெட் பேக்குகளான ரூ.19 மற்றும் ரூ.52-திட்டங்களை நீக்கியது, தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் இரண்டு திட்டங்களின் சலுகைகளை குறைத்துள்ளது. பிஎஸ்என்எல் வேலிடிட்டி குறைக்கப்பட்ட திட்டங்கள் ரூ.29 மற்றும் ரூ.47 ஆகும். அதன்படி ரூ.29எஸ்.டி.வி ஆனது வரம்பற்ற ஆஃப் நெட் மற்றும் ஆன்-நெட் குரல் அழைப்புகள் (தினசரி 250 நிமிடங்கள் என்கிற வரம்புடன்),1 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை ஒரு வாரத்திற்கு (7நாட்கள்) வழங்கியது, ஆனால் சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகு இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரூ.47 எஸ்.டி.வி திட்டம் ஆனது இப்போது வரம்பற்ற குரல் அழைப்பு (ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள்) 1 ஜிபி அளவிலான டேட்டா போன்ற நன்மைகளை ஏழு நாட்களுக்கு மட்டுமே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது மூன்று எஸ்டிவி.களையும் அதன் ப்ரீபெய்ட் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. அந்த திட்டங்கள் ரூ.7, ரூ.9 மற்றும் ரூ.192 ஆகும். ரூ.7 திட்டமானது ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவை வழங்கு திட்டம் ஆகும். அதேபோல் ரூ.9-திட்டமானது 250நிமிடங்கள் என்கிற வரம்பு கொண்ட இலவச அழைப்புகள் மற்றும் 100எம்பி அளவிலான டேட்டா மற்றும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்கிய திட்டமாகும்.

கடைசியாக ரூ.192-எஸ்.டி.வி திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள் (ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள்), 3ஜிபி அளவிலான தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளையும் 28நாட்களுக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய கட்டணத் திட்டங்களை இன்னமும் மதிப்பீடு செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இருந்தபோதிலும் அடுத்த சில நாட்களில் அல்லது அடுத்த வாரத்தில் திருத்தப்பட்ட புதிய திட்டங்களை அறிவிக்கலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory