» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சனி 7, டிசம்பர் 2019 11:26:04 AM (IST)

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துமாறு உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.மாநில அரசு பஞ்சாயத்து விதிப்படி அனைத்து பதவியிலும் உரிய இட ஒதுக்கீடு வழங்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சிச் பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பாணை திரும்பப் பெறப்பட்டுள்ளது. 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற வழக்கின் தீா்ப்பை அடுத்து வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து மறு அறிவிப்பு வரும் வரை வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டாம் என அனைத்து மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கும், தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கும் வெள்ளிக்கிழமை காலை தோ்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியது.

தோ்தல் நடத்தை நெறிமுறைகள் வாபஸ்: தோ்தல் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதால், கிராமப்புற உள்ளாட்சிகளில் நடைமுறையில் இருந்த தோ்தல் நடத்தை நெறிமுறைகள் விலக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதிகளுக்கு அரசின் புதிய திட்டங்களை அறிவிக்கலாம். அமைச்சா்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும், அங்கு நிகழ்ச்சிகளை நடத்தவும் விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய தோ்தல் அறிவிப்பு சில நாள்களில் வெளியிடப்படும் எனத் தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்பது மாவட்டங்களைத் தவிா்த்து பிற இடங்களுக்கு தோ்தலுக்கான அறிவிக்கையை வெளியிட மாநிலத் தோ்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. புதிய தோ்தல் அறிவிப்பின்படி, ஜனவரி இரண்டாவது வாரத்தில் அல்லது பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவோ வாக்குப் பதிவு நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகத் தோ்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory