» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கைலாசம் அமைத்துக் கொடுத்ததே மதுரை மீனாட்சிதான் : நித்யானந்தா பரபரப்பு வீடியோ

சனி 7, டிசம்பர் 2019 1:58:20 PM (IST)

தனக்கு கைலாசம் அமைத்துக் கொடுத்ததே மதுரை மீனாட்சிதான் என நித்யானந்தா பரபரப்பு வீடியாே வெளியிட்டுள்ளார். 

நித்யானந்தா இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், நான் 20 வயதிலே தீட்சிதையைப் பெற்று ஆன்மிகப் பணிக்கு வந்துவிட்டேன். திருவண்ணாமலையில் உள்ள ஒரு மலையில் இரும்புக் கொட்டகைதான் எனது முதல் இருப்பிடம். ஒன்றரை ரூபாய் பணம் கொடுத்தால் ஹீலிங் செய்ய சைக்கிளில் அமர்ந்து செல்வேன். திருவண்ணாமலையில் நான் ஹீலிங் செய்ததை அறிந்து பெங்களுருக்கு ஒரு தம்பதி என்னை அழைத்துச் சென்று ஹீலிங் சிகிச்சை செய்யச் சொன்னார்கள். அதற்கு அவர்கள் கொடுத்த ஊதியம் 101 ரூபாய். அதுவே எனக்கு போதும் என்கிற நிலைதான் இருந்தது.

குழந்தை இல்லாத தம்பி ஒன்று என்னிடம் ஆசி பெற்றனர். அவர்கள் கொண்டுவந்த அன்னாசிப்பழத்தை நான் ஆசீர்வதித்துக் கொடுத்தேன். அவர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது. உடனே வாரஇதழ் ஒன்று என்னை விமர்சித்துக் கட்டுரை எழுதியது. இது நடந்த ஆண்டு 2003. அது முதல் என்னைத் தொடர்ச்சியாக ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. 

என்னை அண்ணாமலை ஆலயத்துக்குள்ளே விட மறுத்தார்கள். நான் மதுரை மீனாட்சியிடம் மீனாட்சி, மீனாட்சி என்றேன் அம்மா உடனே, என்னாச்சு.எ ன்னாச்சு தம்பி என்று கேட்டார்கள். கோயிலுக்குள்ள விட மறுப்பதை பற்றி கூறியதும் தனியாக கோவில் கட்டுமாறு கூறினார்கள். மேலும் என்னை ஆதினத்திற்குள் விட மறுப்பது பற்றியும் நான் மீனாட்சியிடம் முறையிட்டேன். 

உடனே உனக்கு ஆதீனம் கட்டித் தருவதாக கூறினார்கள். என்னுடை பாஸ்போர்ட்டை முடக்கியது அரசு. நீதிமன்றம் உத்தரவிட்டும் எனது பாஸ்போர்ட்டைப் புதுப்பித்துத் தர மறுத்துவிட்டார்கள். என்னை திருவண்ணாமலையிலோ, மதுரையிலோ இருக்கவிட்டிருந்தால் இந்த நிலைக்கு நான் வந்திருக்க முடியுமா? என்னை நீங்கள் அடிக்க அடிக்க நான் வளர்ந்துகொண்டே செல்கிறேன் என்று வீடியோவை வெளியிட்டுள்ளார். நித்யானந்தாவின் வீடியோக்கள் இப்போது சமூக வளைதளங்களில் வைரலாகிவருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory