» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனம்: ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை தொடக்கம்

சனி 7, டிசம்பர் 2019 3:44:24 PM (IST)

திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனத்தன்று மலைக்கு செல்ல ஆன்லைன் வழியேயான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் சிகர நிகழ்ச்சியாக வருகிற 10ம் தேதி கோவில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. மகா தீபத்தின்போது மலை மீது ஏறுவதற்கு நிபந்தனைகளுடன் 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மலை ஏற வரும் பக்தர்களுக்கு அன்று காலை 6 மணி முதல் திருவண்ணாமலை செங்கம்-சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு பள்ளி வளாகத்தில் சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்டு அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி சீட்டு பெற்றவர்கள் காலை 6 மணி முதல் மலை ஏற அனுமதிக்கப்படுவர்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரிசை எண்ணுடன் அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி சீட்டு பெற வரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பிக்க வேண்டும். மலை ஏறும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட ‘பே’ கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கால நேரத்திற்குள் மலையில் ஏறி இறங்க வேண்டும். மற்ற வழிகளில் மலை ஏற அனுமதி வழங்கப்படமாட்டாது. மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர்.

மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையில் இருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டுவர வேண்டும். மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது. இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு அண்ணாமலையார் மலை ஏறும் பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும்.

தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சி பகுதிகள் மற்றும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப்பாதையில் இறைச்சி விற்பனை கடைகளை இன்று முதல் 10ந்தேதி வரை 4 நாட்கள் மூடவும் ஆணையிடப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப தினத்தன்று பரணி தீபம், மகாதீப தரிசனம் செய்வதற்காக ரூ.500, ரூ.600 மதிப்பிலான டிக்கெட்டுகள் தனித்தனியே உள்ளன. இந்த டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் விற்பனை தொடங்கியுள்ளது. அடையாள அட்டை ஒன்றுக்கு ஓர் அனுமதி சீட்டு மட்டுமே பெற முடியும். இதற்காக http://www.arunachaleswarartemple.tnhrce.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory