» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறையில் 10 நாட்களாக இருந்து வந்த உண்ணா விரதத்தை வாபஸ் பெற்றார் நளினி

சனி 7, டிசம்பர் 2019 4:35:08 PM (IST)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி,  10 நாட்களாக இருந்து வந்த உண்ணா விரதத்தை வாபஸ் பெற்றார் 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி பெண்கள் சிறையிலும் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள். முருகனின் அறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதாக அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார். ஜெயில் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் முருகன் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து நளினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

இந் நிலையில் தங்களை கர்நாடகா அல்லது வேறு மாநிலத்தில் உள்ள ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் என்று நளினி கோரிக்கை விடுத்தார். மேலும் தங்களுக்கு விடுதலை கிடைக்காததால் கருணைக்கொலை செய்யக்கோரியும் கடந்த மாதம் 28-ந்தேதி நளினி மனு கொடுத்தார். அன்று முதல் தொடர் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் 10-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். முருகன் 8-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக இருவரின் உடல் நிலையும் மோசமானது. இதனால் அவர்களுடைய உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். 

உடல்நிலை மோசமானதை தொடர்ந்து நேற்று முன்தினம் இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்றினர். அதைத் தொடர்ந்து 3-வது நாளாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. மேலும் அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்படுகிறது. தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதால் 64 கிலோ எடை இருந்த முருகனின் உடல் எடை தற்போது 20 கிலோ குறைந்து 44 கிலோ இருப்பதாக அவருடைய வக்கீல் புகழேந்தி தெரிவித்தார். இந்நிலையில் வேலூர் பெண்கள் சிறையில் 10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி  இன்று வாபஸ் பெற்றார். ஆண்கள் சிறையில் இருந்த முருகன் கேட்டுக்கொண்டதை அடுத்து, நளினி உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory