» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்: மீண்டும் திமன்றத்தை நாட முடிவு

ஞாயிறு 8, டிசம்பர் 2019 9:31:35 AM (IST)

உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையில் தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டது. அதன்படி, 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். ஜனவரி 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநில தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் உத்தரவுகளை பின்பற்றாமல் தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பு அனைத்துக் கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தாதது ஏன்? நேர்மையான சுதந்திரமான தேர்தல் என்ற உயர்ந்த நோக்கங்களை கேலிக்கூத்தாக்கியுள்ளனர். அதிமுக அரசின் கைப்பாவையாக மாநில தேர்தல் ஆணையர் மாறியுள்ளது ஜனநாயகத்திற்கு வெட்ககேடு. வார்டு வரையறை,இடஒதுக்கீடு செய்து முடித்த பின்னரே தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாமல் அதற்குள் புதிய தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது கண்டனத்துக்குரியது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory