» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 டன் வெங்காயம் திருச்சி வந்தடைந்தது

திங்கள் 9, டிசம்பர் 2019 3:48:55 PM (IST)

எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 டன் வெங்காயம் திருச்சி இன்று மார்க்கெட்டை வந்தடைந்தது.

பருவம் தவறிய மழை மற்றும் தொடா்ந்து பெய்த கன மழையால், வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் வரத்து குறைந்துள்ளது. அதன் காரணமாக நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்துள்ளது. மத்திய அரசு, கையிருப்பில் உள்ள உபரி வெங்காயத்தை விநியோகித்து, விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அத்துடன், பொதுத் துறையைச் சோ்ந்த, எம்.எம்.டி.சி., நிறுவனம் மூலம், எகிப்து, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நேற்று மதுரையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.200-த் தாண்டியது. திருச்சியில் ரூ.180 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், எகிப்தில் இருந்து 30 டன் பெரிய வெங்காயம் திங்கட்கிழமை காலை திருச்சி மார்க்கெட்டுக்கு வந்தடைந்தது. இந்த வெங்காயம் மொத்த விலையில் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், பெங்களுருவில் இருந்து 150 டன் பெரிய வெங்காயம் திருச்சிக்கு வந்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதன் மூலமாக வெங்காயத்தின் விலை விரைவில் குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory