» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

2-ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ஆ.ராஜா மீண்டும் சிறைக்குச் செல்வார்: சுப்பிரமணிய சுவாமி பேச்சு

திங்கள் 9, டிசம்பர் 2019 3:54:48 PM (IST)

2-ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ஆ.ராஜா மீண்டும் சிறைக்குச் செல்வார். ஜாமீனில் வெளியில் வருவதை தலைவர்கள் பெருமையாகக் கருதுகின்றனர் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று தெரிவித்தார்.

பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் 80-வது பிறந்த நாளையொட்டி மதுரையில் சதா பிஷேக விழா நடத்த விராத் ஹிந்துஸ்தான் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் நேற்று நடைபெற்ற இவ்விழாவில் சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில் "கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மக்களின் டிஎன்ஏ வும் ஒன்றுதான். 

இதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழக பாடப் புத்தகத்தில் இந்த விஷயம் விரைவில் இடம் பெறும். பாஜக ஆட்சியில் அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம். முத்துராமலிங்கத் தேவர் சொன்ன தேசியமும், தெய்வீகமும் தான் நமது கொள்கை. ஜனநாயகத்தை உடைக்க முயன்ற இந்திரா காந்தியை இந்திய மக்கள் புறக்கணித்தனர். முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் வாதத்திறமை எனக்கு மிகவும் பிடிக்கும். கருணாநிதி, உதயசூரியன் என்பது தமிழ்ப் பெயர்கள் அல்ல. அது சமஸ்கிருதப் பெயர் என அவரிடமே சொல்லியிருக்கிறேன். தமிழில் 40 சதவீதம் சமஸ்கிருதம் உள்ளது. ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக ஆங்கிலேயேர்களால் ஏற்படுத்தப் பட்ட சதியே தமிழ் சமஸ்கிருதம் விவாதம். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாட்டில் அதிகரிக்கிறது. 

மதுரை விமான நிலையத்துக்கு கட்டாயம் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படும்.மதுரையில் வளர்ச்சி இல்லை. நெல்லை முதல் மதுரை வரை மெட்ரோ ரயில் சேவை வேண்டும் எனக் கேட்டுள்ளேன். அது நடை பெறவில்லை. மதுரையில் பொருளாதார மறுமலர்ச்சியைக் கொண்டு வர வேண்டும். அரசு சார்பில் எந்த உதவியும் கிடைக்காத நிலையில், ஊழலை ஒழிக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றேன். 2-ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ஆ.ராஜா மீண்டும் சிறைக்குச் செல்வார். ஜாமீனில் வெளியில் வருவதை தலைவர்கள் பெருமையாகக் கருதுகின்றனர். தமிழகத்துக்குப் புதிய தலைமை வரும். அதற்கு எனது உதவி இருக்கும். மதுரையை சீர் செய்வதே எனது ஆசை. அதை நிறைவேற்றுவேன். வரும் தேர்தலில் மதுரை அல்லது தமிழகத்தில் எங்காவது போட்டியிடுவேன்" என  பேசினார்.


மக்கள் கருத்து

ssaamiDec 13, 2019 - 04:32:25 PM | Posted IP 49.20*****

மிக்க மகிழ்ச்சி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory