» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் இந்தியா செழிக்கும்: புதிய வீடியோ வெளியிட்ட நித்தியானந்தா!

வெள்ளி 13, டிசம்பர் 2019 5:41:05 PM (IST)

அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால், இந்தியா பொருளாதார ரீதியில் செழிக்கும் என நித்தியானந்தா, புதிய வீடியோவில் தெரிவித்துள்ளார்.

தலைமறைவாக உள்ள சாமியார் நித்தியானந்தா, அவ்வபோது வீடியோ வெளியிட்டு அதில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில், தனி தீவை வாங்கி ஹிந்துக்களுக்கென தனி நாடை உருவாக்குவதாகவும், அதற்கு கைலாசா என்ற பெயரும் வைத்துள்ளதாக கூறினார். இதற்கிடையே நித்தியானந்தா மீது, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் தலைமறைவாக உள்ளார். இவர் எங்கு உள்ளார் என்பதை டிச.,18ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய கர்நாடக அரசு மற்றும் மாநில போலீசாருக்கு கர்நாடகா நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், நித்தியானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் அரசியல் பேச வரவில்லை. ஆனால் ஒரு விஷயம் சொல்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் இந்தியா, பொருளாதார ரீதியில் செழிக்கும். இதற்கு காரணம், சமூகத்திற்கு பங்களிக்கும் ராமரின் கொள்கை தான். ராமர் கோயில் கட்ட நிதி அளிப்பது, இந்திய பொருளாதாரத்திற்கு பங்களிப்பதாகும். என் சீடர்கள் முடிந்தளவு கோயில் கட்டுமானத்தில் பங்களிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நானும் எனது வழியில் பங்களிப்பேன். என்னிடம் எதுவும் இல்லை என கூறமாட்டேன், லெட்சுமி என்னுடன் இருக்கிறாள். இவ்வாறு நித்தியானந்தா வீடியோவில் கூறியிருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory