» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்

வெள்ளி 13, டிசம்பர் 2019 8:11:28 PM (IST)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் உட்பட 7 பேர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்று வருகின்றனர். அவர்களை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி வலியுறுத்தல்கள் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும் நளினி தரப்பில் ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 10 ஆண்டுகளில் சிறையில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தங்களை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு பரிந்துரை செய்த பிறகும் கூட ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளார். இதனால் தன்னை (நளினி) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory