» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்டெர்லைட் வழக்கு: 16ம் தேதி முதல் விசாரணை தொடக்கம் - உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சனி 14, டிசம்பர் 2019 11:55:57 AM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி, கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு விசாரித்தது. 

இதனிடையே நீதிபதி சிவஞானம் கடந்த 3 மாதங்களாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்து வந்ததால், ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு, வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெறும் என உயர்நீதிமன்ற பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

MURUGESANDec 17, 2019 - 12:38:51 PM | Posted IP 162.1*****

PLEASE OPEN PLANT FOR ALL OVER INDIA ECONOMIC DOWN NOW ALL PEOPLE ACCEPTED THAT PLANT WHAT IS TRUE

K.ganeshanDec 15, 2019 - 11:21:45 AM | Posted IP 173.2*****

Good news.poor labourers are waiting for the opening of the plant.let us hope for the favourable verdict to open Sterlite.7

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory