» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுகவின் வெற்றியை தடுக்க அதிமுக, காவல்துறை, அதிகாரிகள் சதி : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

வியாழன் 2, ஜனவரி 2020 3:33:57 PM (IST)

திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக, காவல்துறை, அதிகாரிகள் துணையோடு திட்டமிட்டு சதி செய்ய முயற்சி நடக்கிறது என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து  புகார் மனு அளித்தார்.  மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் புகாரளித்த பின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அறிவிக்கப்பட வேண்டிய தேர்தல் முடிவுகளை கூட அறிவிக்காமல் இருக்கிறார்கள். 

ஏறக்குறைய 80 சதவிகிதத்திற்கும் மேலான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கி முந்திக்கொண்டிருக்கிறது. சேலம் கொளத்தூரில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அதை அறிவிக்காமல் உள்ளனர். எடப்பாடியில் எண்ணி முடிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டிய முடிவுகளை அறிவிக்காமல் உள்ளனர். திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக, காவல்துறை, அதிகாரிகள் துணையோடு திட்டமிட்டு சதி செய்ய முயற்சி நடக்கிறது. விளாத்திக்குளத்தில் 3 வாக்குப்பெட்டிகளை காணவில்லை என்ற செய்திகள் வருகின்றன. 

துணை முதலமைச்சரின் போடி பகுதியில் இதுவரை வெற்றி நிலவரங்களை அறிவிக்கவில்லை. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாவட்ட அளவில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்தேன். எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட இடங்களில் திமுக முன்னிலையில் இருக்கிறது. ஆனால் வெற்றியை அறிவிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தில் வந்து உண்ணாவிரதம் இருப்பதா அல்லது மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவதா என்பது பிறகு முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory