» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு : உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

வியாழன் 2, ஜனவரி 2020 4:09:11 PM (IST)

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. 

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தலைமை தேர்தல அலுவலகத்தில் தேர்தல் ஆணைர் பழனிசாமியை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று புகார் அளித்தார்.  அப்போது பேசிய அவர், அறிவிக்கப்பட வேண்டிய தேர்தல் முடிவுகளைகூட அறிவிக்காமல் இருக்கிறார்கள். 

மாவட்ட அளவில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்தேன் என்று விளக்கமளித்தார். இந்நிலையில் உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இம்மனுவை அவசர வழக்காக இன்று விசாரிக்க மறுத்த நீதிமன்றம் நாளை காலை முறையிட அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory