» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 21 வயது கல்லூரி மாணவி வெற்றி : இளம் வயதில் சாதனை

வியாழன் 2, ஜனவரி 2020 5:51:11 PM (IST)

கிருஷ்ணகிரி அருகே 21 வயது கல்லூரி மாணவி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழன் காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே 21 வயது கல்லூரி மாணவி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டிநாயக்கன் தொட்டி கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பிபிஏ இறுதி ஆண்டு மாணவி ஜெ.சந்தியா ராணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் மிக இளம் வயதில் பஞ்சாயத்து தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.


மக்கள் கருத்து

உண்மைJan 6, 2020 - 05:37:36 PM | Posted IP 108.1*****

இவ அரசியல்வாதி புள்ளை.. பெற்றோர் பதவி ஆசைக்காக கேவலம்.

அருண்Jan 3, 2020 - 08:47:42 PM | Posted IP 106.2*****

காமெடி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory