» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரு வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் தோல்வி : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

வியாழன் 2, ஜனவரி 2020 8:45:26 PM (IST)

கன்னியாகுமரி அருகே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் ஒருவர் தோல்வி அடைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.  

இந்நிலையில் குமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தடிக்காரான் கோணம் ஊராட்சி 2 ஆவது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் பானுமதி 62  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் மாரிமுத்து 61 வாக்குகள் பெற்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory