» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திருநங்கை ரியா வெற்றி: தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்து!

வெள்ளி 3, ஜனவரி 2020 10:55:40 AM (IST)

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திருநங்கை ரியாவுக்கு தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தி.மு.க கூட்டணியும், அ.தி.மு.க கூட்டணியும் பெருவாரியான பகுதிகளில் வெற்றி பெற்றுவருகின்றன.

இந்தநிலையில், தி.மு.க சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் 2-வது போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 950 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு தி.மு.க எம்.பி தமிழச்ச தங்கபாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், திமுக வேட்பாளராக போட்டியிட்ட திருநங்கை ரியாவின் வெற்றி மனதிற்கு மிக உவப்பான செய்தி! சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கான அதிகாரத்தைப் பெற்றுத்தரும் இயக்கமாக நமது கழகம் திகழ்வதன் மற்றுமொரு சான்று இந்த வெற்றி. முற்போக்குச் சிந்தனையோடு வாக்களித்த வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory