» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு: ஜனவரி 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!!

வெள்ளி 3, ஜனவரி 2020 8:16:32 PM (IST)

தமிழக பள்ளி அரையாண்டு விடுமுறை ஜனவரி 6 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. அனைத்து வகுப்புகளுக்குமான அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து, டிசம்பர் 24 ஆம் முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே கிறிஸ்துமஸ், புத்தாண்டு, உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை வந்ததால், விடுமுறை நாட்கள் ஜனவரி.2 வரையில் நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து அரையாண்டுத் விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது.

இந்த நிலையில், தற்போது அரையாண்டு, பண்டிகை கால விடுமுறை நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக்ககல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை விடுத்துள்ளார். அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறைகள் முடிந்து ஜனவரி 6 ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.ஜனவரி 6 ஆம் தேதி பள்ளிகள் திறந்ததும், முதல் நாளிலேயே அடுத்த பருவத்துக்கான பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory