» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

சனி 4, ஜனவரி 2020 10:37:40 AM (IST)

விருதுநகர் அருகே காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

விருதுநகர் அருகேயுள்ள வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன். தொழிலாளி. இவரது மகன் சரவணன்(22). இவர் விருதுநகரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து முடித்துள்ளார். விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் ரஞ்சிதா(22). இவரும் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி படித்து முடித்துள்ளார். இந்நிலையில் சரவணனுக்கும் ரஞ்சிதாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆனால்இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 

இதனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். நேற்று மாலை விருதுநகர்-சாத்தூர் ரயில்பாதை பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அந்த வழியாக வந்த ரயில்முன் இருவரும் பாய்ந்துள்ளனர். இதில் 2 பேரும் உடல் சிதைந்து அதே இடத்தில் இறந்து போனார்கள். தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடலை பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுதொடர்பாக தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.


மக்கள் கருத்து

அருண்Jan 5, 2020 - 11:35:01 AM | Posted IP 157.4*****

ஏண்டா இப்பிடி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory