» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி ரவுடி கொடைக்கானலில் வெட்டிக் கொலை : கொலையாளி போலீசில் சரண்

சனி 4, ஜனவரி 2020 11:20:44 AM (IST)

தூத்துக்குடியில் கொலை, உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கொடைக்கானலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

தூத்துக்குடி, திரவியபுரத்தைச் சேர்ந்தவர் செல்லப்பா மகன் ஜான்சன் (55), தூத்துக்குடி அம்பேத்கர் நகர், கோமதிபாய் காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் சரவணன் (28), பிரபல ரவுடிகளான இவர்கள் மீது வடபாகம், சிப்காட், தாளமுத்துநகர், காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிப்காட் பகுதியில் நடந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர்கள் தற்போது ஜாமினில் வந்துள்ளனர். 

இவர்கள் இருவரும், கொடைக்கானலில் தற்கொலை முனை அருகேயுள்ள பாம்பார்புரம் என்ற பகுதியில்  கட்டணக் கழிப்பறையை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சரவணன், ஜான்சனை அரிவாளால் சராமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கொலையாளி சரவணன் போலீசில் சரண் அடைந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory