» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பி.எச்.பாண்டியன் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு‍: அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல்

சனி 4, ஜனவரி 2020 12:12:37 PM (IST)

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் பிறந்தவர் பி.எச்.பாண்டியன் (வயது 74). அதிமுகவைச் சேர்ந்த இவர் 1985 முதல் 1989 வரை தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகராக இருந்தார். மூன்றுமுறை சேரன்மகாதேவி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நெல்லை மக்களவை தொகுதி எம்.பி.யாகவும் (1999), அதிமுக அமைப்பு செயலாளராகவும் பணியாற்றியவர்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பி.எச்.பாண்டியன் சென்னையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள்  இரங்கல் தெரிவித்துள்ளனர். பி.எச்.பாண்டியன் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அவரது மறைவு தென் மாவட்டங்களுக்கு பேரிழப்பு என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு பக்கபலமாக இருந்தவர் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம் சூட்டினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory