» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக போல முஸ்லிம்களுக்கு ஆபத்தான கட்சி எதுவுமே இல்லை: சீமான் பேட்டி

சனி 4, ஜனவரி 2020 3:46:01 PM (IST)

திமுக போல முஸ்லிம்களுக்கு ஆபத்தான கட்சி இந்த நிலத்தில் எதுவுமே இல்லை; வன்முறையத் தூண்டும் பேச்சுக்கு கைது என்றால் பாஜகவில் யாரும் வெளியே இருக்க முடியாது  என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஜன.4) சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கே.வி.என். திருமண மண்டபத்தில் சீமான் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த சீமான், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் தாக்கம் இந்த உள்ளாட்சித் தேர்தலில் பிரதிபலித்துள்ளது. அதில் மாற்றுக் கருத்து கிடையாது. திமுக நடத்திய நாடகத்தை மக்கள் ரசித்திருக்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். இச்சட்டத் திருத்தத்தை முதன்முறையாக வாஜ்பாய் ஆட்சியில் கொண்டு வரும்போது அந்தக் கட்சியுடன் கூட்டணியில் இருந்தது திமுக. ஈழத் தமிழர்களுக்கான குடியுரிமையை திமுக பேசுகிறது. 

இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரவில்லையென்றால் திமுக இதனைப் பேசியிருக்குமா? இதற்கு ஸ்டாலின் பதில் சொல்வாரா? 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியில் கூட்டணியாக இருந்த கட்சி திமுகதான். அப்போதெல்லாம் இதனைப் பேசாமல் என்ன செய்து கொண்டிருந்தனர்? இதற்குப் பதிலில்லை. இப்போது முஸ்லிம்கள் மீது பெரிய கருணை இருப்பது போல காட்டிக்கொள்கின்றனர். இது பிரசாந்த் கிஷோர் மாதிரியான ஆட்களின் வேலைத்திட்டமாகக் கூட இருக்கலாம். கருணையுடன் பேசுபவர்தான் நம் தலைவர் என நம்புகிற நிலை முஸ்லிம்களுக்கு உண்டு. திமுக போல முஸ்லிம்களுக்கு ஆபத்தான கட்சி இந்த நிலத்தில் எதுவுமே இல்லை.


நாங்கள் வளர்கிற பிள்ளைகள். திமுக மீதான நம்பிக்கை கட்டிடமாக கட்டப்பட்டுவிட்டது. நாங்கள் இப்போதுதான் கட்டிக் கொண்டிருக்கிறோம். முஸ்லிம் அமைப்புகள் எல்லாமே திமுகவுடன் கூட்டணியில் உள்ளன. அதனால் அந்தத் தலைவர்கள் சொல்வதை முஸ்லிம்கள் கேட்கின்றனர். இளைஞர்கள் எங்களுடன்தான் பயணிக்கின்றனர். பிரசாந்த் கிஷோர் போன்ற தேர்தல் ஆலோசர் எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் உலகத்தையே ஆள்வதற்கான அறிவு பெற்றிருக்கிறோம். இன்னொருவரின் மூளைக்கு எங்களால் வேலை செய்ய முடியாது. நாங்கள் அறிவின்மை கொண்டவர்கள் அல்ல. மக்களுக்கு உள்ளத் தூய்மையுடன் சேவை செய்ய வந்திருக்கிறோம். 

அப்படிச் செய்திருந்தால் பிரசாந்த் கிஷோர் திமுகவுக்குத் தேவையில்லை. கட்சித் தலைமை மீது நம்பிக்கை இல்லாததால் இன்னொருவரைக் கூலியாக வேலைக்கு வைத்திருக்கின்றனர். அவருக்கு 250 கோடி ரூபாய் சம்பளம் என்கின்றனர். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எண்ணி முடிப்பதற்குள்ளேயே இறந்துவிடுவோம் போலிருக்கிறது. நெல்லை கண்னன் கைது விவகாரத்தில் திமுக கருத்து தெரிவிக்காது. காங்கிரஸ் கட்சியே தெரிவிக்கவில்லை. காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவர் நெல்லை கண்ணன். அந்தக் கட்சியின் நிலைப்பாடுகள் பிடிக்காமல் ஒதுங்கிவிட்டார். காங்கிரஸில் இருந்து கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டிருக்கிறார். எங்களின் ஈழ விடுதலையை ஆதரித்தவர் அல்ல நெல்லை கண்ணன். 

அதில் நாங்கள் எப்போதும் முரண்படுவோம். ஆனால், அவரைப் போல தமிழறிஞர் சமகாலத்தில் இல்லை. அவரைக் கைது செய்தது கொடுமையான செயல். இது தமிழுக்கும், தமிழினத்திற்குமான அவமானம். உள்ளே இருந்து கல்லெறிந்தால் நாங்கள் வெளியே இருந்து குண்டெறிவோம் என ஹெச்.ராஜா சொன்னார். இதை விட வன்முறையைத் தூண்டும் பேச்சு இருக்க முடியாது. வன்முறையத் தூண்டும் பேச்சுக்கு கைது என்றால் பாஜகவில் யாரும் வெளியே இருக்க முடியாது. எல்லோரும் உள்ளேதான் இருக்க வேண்டும். யாருடைய திருப்திக்காகவோ செய்யப்பட்டது இந்தக் கைது நடவடிக்கை. அவரின் முதுமையைக் கருத்தில் கொண்டு விடுவிக்க வேண்டும். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

குமார்Jan 6, 2020 - 01:27:30 PM | Posted IP 108.1*****

சைமன் அவர்களே நீங்கள் நெல்லை கண்ணனின் பேச்சை ஆதரிக்கிறீர்களா? வன்முறையை தூண்டும் விதமாக யார் பேசினாலும் தவறே...நெல்லை கண்ணன் பேசியது மிக தவறு....அவருக்கு சட்ட தண்டனை காவல்துறையினர் வழங்கவேண்டும்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory