» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஜன. 10-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ரத்து

சனி 4, ஜனவரி 2020 3:52:20 PM (IST)

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக ஜனவரி 10-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத் தொகை ரூ. 1000 வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத் துண்டு ஆகியவை இடம்பெற்றிருக்கும். இதனுடன் ரூ. 1000 ரொக்கமும் வழங்கப்படும்.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை 2020 ஜனவரி 9-ஆம் தேதி முதல் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக ஜனவரி 10-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறையில்லை என்று தமிழக அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது. 2-ஆவது வெள்ளிக்கிழமையான 10-ஆம் தேதிக்குப் பதிலாக 16-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory