» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேரூராட்சி, மாநகராட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: மாநில தேர்தல் ஆணையர் பேட்டி

சனி 4, ஜனவரி 2020 5:44:44 PM (IST)

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் இரா. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மாநிலத் தேர்தல் ஆணையர் இரா. பழனிசாமி  இன்று  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்பதை ஏற்க முடியாது, இந்திய தேர்தல் ஆணையத்தின் பட்டியலைத்தான் பயன்படுத்துகிறோம்.  ஊரக உள்ளாட்சி தேர்தலில் 25 பதவியிடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஜனவரி 6ம் தேதி காலை 10:00 மணிக்கு பதவி ஏற்பார்கள். முன் எப்போதும் இல்லாத அளவு தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்ற‌து.  இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 77.46% வாக்குகள் பதிவாகியிருந்தன. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகள் விலகியது

தமிழ்நாட்டில் 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் 2019 நடைமுறைகள் 4.1.2020 அன்றுடன் முடிவடைவதால், தேர்தல் மாதிரி நடத்தை விதிகளும் 4.1.2020 அன்றுடன் முடிவுக்கு வருகிறது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் இரா. பழனிசாமி இன்று அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory