» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் வழிபாடு

சனி 4, ஜனவரி 2020 6:39:47 PM (IST)மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் வருகை தந்து அருள்திரு பங்காருஅடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்திற்கு இன்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் வருகை தந்தார். அவர் அருள் கூடத்தில் அருள்திரு பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு வருகை தந்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாசை ஆன்மீக இயக்கத் துணைத்தலைவர் கோ.ப. செந்தில்குமார் வரவேற்றார். முதலில் கருவறைக்குச் சென்று ஆதிபராசக்தி அம்மனை அவர் வழிபட்டார். பின்பு சப்த கன்னியர் கோவில், நாகபீடம் சென்று வழிபட்டார். அதன் பின்னர் தியான மண்டபம் சென்று தியானத்தில் ஈடுபட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory