» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி: வாக்காளர்களை திட்டி வீதி வீதியாக போஸ்டர் ஓட்டிய வேட்பாளர்

ஞாயிறு 5, ஜனவரி 2020 9:04:52 AM (IST)

உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு பெற முயன்ற வேட்டபாளர் ஒருவர் தோல்வியடைந்ததால் பணம் வாங்கியவர்களை திட்டி வீதி வீதியாக போஸ்டர் ஒட்டி உள்ளார்.

தமிழகத்தில் 2 கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். 27 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி 2 நாட்களாக நடைபெற்றது. மேற்கு மாவட்டங்களில் அதிமுகவும், தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் திமுகவும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.  ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அற்கான சான்றிதழ் பெற்றுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டுவது ஒருபுறமிருக்க தோல்வியடைந்தவர்களும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.  மன்னார்குடி அருகே கீழப்பனையூர் கிராமத்தில் "காசு வாங்குன ஓட்டுப்போட்டாயா" என்று பெயர் குறிப்பிடாத வேட்டபாளர் ஒருவர்  பணம் வாங்கிய வாக்காளர்களை திட்டி போஸ்டர் ஒட்டியுள்ளார். தேர்தல் விதிமுறைப்படி ஒட்டுக்கு பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் குற்றமாகும். ஆனால் வாக்காளர்கள் கொடுத்த பணத்திற்கு ஓட்டுப் போடவில்லை என்று வேட்பாளர் ஒருவர் திட்டி போஸ்டர் ஒட்டி உள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory