» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

ஞாயிறு 5, ஜனவரி 2020 5:53:24 PM (IST)

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு குறித்து மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடைக்கோரி நீதிமன்றத்தில் திமுக அவசர வழக்கு போட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்னை முந்திரிக்கொட்டை என்கிறார். முந்திரிக்கொட்டை உடலுக்கு நல்லது. புரதம் சத்து நிறைந்தது.

திமுக தலைவர் தான் படித்த பள்ளிக்கு சென்று நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். நாளைக்கு நான் எப்படி வருவேன் என்று எனக்கே தெரியவில்லை என்று கூறுகிறார். ஆனால், மு.க.ஸ்டாலின், தான் படித்த பள்ளிக்கு அடுத்தமுறை சென்றாலும் திமுக தலைவராகவே தான் செல்வார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டிருக்கலாம். கூட்டணி ஆதரவு இல்லையென்றாலும் பல இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார்  கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory