» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குழந்தைகள் ஆபாச வீடியா பதிவேற்றம் தொடர்பாக மேலும் ஒரு பட்டியல் தயார் - ஏடிஜிபி ரவி தகவல்

ஞாயிறு 5, ஜனவரி 2020 6:32:07 PM (IST)

சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவேற்றமோ, பதிவிறக்கமோ செய்தால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுத்தரப்படும் என  பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆபாசப் படங்களைப் பாா்ப்பவா்கள், பரப்புபவா்கள் குறித்து போலீஸாா் சமூக ஊடகப் பிரிவு மூலம் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். குறிப்பாக, குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பாா்ப்பவா்கள், பரப்புபவா்கள் குறித்து போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். இதுபோல ஆபாசப் படத்தை அனுப்பிய திருச்சியைச் சோ்ந்த இளைஞா் சில நாள்களுக்கு முன் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பலருக்கு சமூக வலைதளங்களில் பகிர்ந்த பொள்ளாச்சியில் உள்ள டைல்ஸ் விற்பனைக் கடையில் பணியாற்றிய அஸ்ஸாம் மாநிலத்தை சோ்ந்த ரெண்டாபாசுமாடரி (23) என்பவரை கைது செய்த அனைத்து மகளிா் போலீஸாா், அவரிடம் இருந்த செல்லிடப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.இந்நிலையில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி கூறுகையில், குழந்தைகள் ஆபாச விடியோவை வர்த்தக ரீதியாக பதிவேற்றமோ, பதிவிறக்கமோ செய்தால் 10 ஆண்டுகள் சிறை பெற்றுத்தரப்படும். மேலும் குழந்தைகள் ஆபாச வீடியா பதிவேற்றம், பதிவிறக்கம் தொடர்பாக மேலும் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory