» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தர்பார் படத்திற்கு, சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுமா? அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்

ஞாயிறு 5, ஜனவரி 2020 10:17:58 PM (IST)

முறைப்படி அணுகினால் தர்பார் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை வானரமுட்டியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம், தர்பார் படத்தில் உள்நாட்டு இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல், வெளிநாட்டுக் களைஞர்களுக்கு வாய்ப்பளித்தாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, திரைப்படத்தில் எந்த கலைஞரை பயன்படுத்த வேண்டுமென்பது தயாரிப்பாளர்களின் முடிவு. 

இதை திரைப்படம் வெளிவரும் போது சொல்வதைவிட, தயாரிக்கும்போது சொல்லியிருக்க வேண்டும். இதில் அரசு தலையிட முடியாது. ஒரு படத்தில் யார் நடிகர், யார் இயக்குனர் என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தயாரிப்பாளர். இதில் அரசு தலையிடுவது அவர்களின் உரிமையை பறிப்பது போன்றது. தமிழ் சினிமா திரை கடல் போன்றது. ஒவ்வொன்றுக்கும் சங்கம் இருக்கிறது. திரைப்படம் தயாரிக்கப்படும்போது இந்த கருத்தைச் சொல்லி இருக்க வேண்டும். தற்போது இதை சொல்வது அந்த படத்திற்கு விளம்பரத்தை தேடுவதற்காக சொல்லப்படும் கருத்து என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தர்பார் படத்திற்கு இதுவரை சிறப்பு காட்சிக்கு யாரும் அனுமதி கேட்கவில்லை. திரைப்படம் 9 ந்தேதி தான் வெளியாக உள்ளது. முறைப்படி யார் அணுகினாலும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மறுக்கப்படவில்லை. எங்களுக்கு கட்சி, நடிகர்கள், திரைப்படக் கலைஞர்கள் என பாகுபாடு கிடையாது. நடிகர் விஜய், அஜித் படங்கள் மற்றும் ரஜினியின் காலா போன்ற படங்களுக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்து இருக்கிறோம். தயாரிப்பாளர்கள் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வேண்டும் என்று அரசை அணுகினால் முதல்வரின் ஆலோசனை பெற்று பரிசீலிக்கப்படும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory