» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்தல் - பேரவையில் ஆளுநர் உரை

திங்கள் 6, ஜனவரி 2020 11:04:37 AM (IST)

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் (2020) முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகையில், தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மத வேறுபாடின்றி தமிழக மக்கள் அனைவரின் நலனும் பாதுகாக்கப்படும்!

* ஜெயலலிதா நினைவு மண்டபம் விரைவில் கட்டி முடிக்கப்படும்!

* காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டம் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்!

* மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.

* 2011 ஆளுநர் உரையில் அறிவிக்கபட்ட 103 திட்டங்களில் 73 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

* 2017 பிப்ரவரிக்கு பிறகு முதல் அமைச்சர் 453 அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் 114 திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு உள்ளன.

* பலவேறு தடைகளுக்கு மத்தியில் உள்ளாட்சி தேர்தல் திறம்பட நடத்தப்பட்டு உள்ளது.

* மக்களாட்சியை பரவலாக்குவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது.

* சட்டம் ஒழுங்கு சிறப்பாக நிலை நாட்டப்பட்டதில் தமிழக அரசுக்கு முதலிடம் வழங்கபட்டு உள்ளது.

* இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

* பிரதமர் மோடி -சீன அதிபர் சந்திப்பை தமிழக அரசு சிறப்பாக நடத்தியது.

* மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது.

* காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். 

* மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.563.50 கோடி மதிப்பீட்டில் திட்டம்.

* நடப்பாண்டு இதுவரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.7,096 கோடி பெறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory