» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்களுக்கு புதிய பணி : முதல்வர் நியமன ஆணை வழங்கினார்

திங்கள் 6, ஜனவரி 2020 4:15:14 PM (IST)

மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்களுக்கு புதிய பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் உபரி பணியாளர்களாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளர் நிலையில் காலியாக உள்ள பணியிடத்திற்கு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு 491 பேர் தெரிவு செய்யப்பட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (6.1.2020) தலைமைச் செயலகத்தில், அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். 

தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவின்படி தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் 1000 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், நெடுஞ்சாலை அருகாமையில் அமையதுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அகற்றிட வேண்டுமென்ற உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படியும் 3321 கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியது வயத பணியாளர்கள், இயங்கிவரும் பிற மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் உபரி பணியாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.  

தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூட்டத்தில், உபரியாக பணிபுரிந்து வரும் கடைப் பணியாளர்களை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களில் சிறப்புத் தேர்வு நடத்தியும், பிற துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களிலும் நியமனம் செய்ய வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. 

அதன்படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்களைக் கொண்டு சிறப்புத் தேர்வு நடத்தி இளநிலை உதவியாளராக பணி நியமனம் செய்திட 18.8.2019 அன்று சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் ஆகிய மண்டல மையங்களில் சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு 491 இளநிலை உதவியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.அதனைத் தொடர்யது, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 491 பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory