» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்வில் முறைகேடு நடந்ததா? டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!!

திங்கள் 6, ஜனவரி 2020 5:32:32 PM (IST)

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து தேர்வாணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 1. டி.என்.பி.எஸ்.சி தொகுதி-4 தேர்வுகளில் ராமேஸ்வரம், கீழக்கரையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் 40 இடங்களை பிடித்து இருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

2. 2017-18-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி 2ஏ தேர்வுகளில் முதல் 50 இடங்களைப் பிடித்தவர்களில் 30 பேர் இந்த மையங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஐயத்தை அதிகப்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கமளிக்க வேண்டும்.

3. அதிகம் பேர் முதலிடம் பெற்ற தேர்வு மையங்களில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தேடி வந்து தேர்வு எழுதியிருப்பது இயல்பாக நடந்த ஒன்றா? திட்டமிட்டு செய்யப்பட்ட ஏற்பாடா? என்பது குறித்து விளக்கம் தேவை. இதில் முறைகேடு நடந்திருந்தால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory