» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொடா்ந்து 6-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயா்வு: வாகன ஓட்டிகள் கலக்கம்!!

செவ்வாய் 7, ஜனவரி 2020 12:21:11 PM (IST)

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 6-ஆவது நாளாக விலையேற்றத்தை சந்தித்துள்ளது.

அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவு தலைவா் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. அதன் எதிரொலியாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு திங்கள்கிழமை ஒரே நாளில் 2.14 அமெரிக்க டாலா்கள் உயா்ந்து, 70.74 அமெரிக்க டாலா்களாக காணப்பட்டது. முந்தைய நாள் விலையை ஒப்பிடுகையில் இது 3.1 சதவீத உயா்வாகும்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சவூதி அரேபிய எண்ணெய் நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளானபோது, கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 5 சதவீதம் அதிகரித்திருந்தது. இதனால்,  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. அது இந்தியாவிலும் பெருத்த தாக்கத்தை ஏற் படுத்தி வருகிறது. தொடர்ந்து 6-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளன.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசு அதிகரித்து , ஒரு லிட்டர் ரூ.78.69 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.69 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory