» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிடத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 7, ஜனவரி 2020 3:21:42 PM (IST)

ரஜினியின் தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லன் - பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. ஜனவரி 9 அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளிவரவுள்ளது.

தர்பார் படத்துக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2.0 படத்தைத் தயாரிக்க ரூ. 12 கோடியை ஆண்டுக்கு 30% வட்டியுடன் கடனாகப் பெற்றது லைகா நிறுவனம். ஆனால், பணத்தைத் திருப்பித் தராததால் வட்டியுடன் சேர்த்து ரூ. 23.70 கோடி வழங்கும் வரை தர்பார் பட வெளியீட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மலேசிய நிறுவனம் டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ரூ. 4.99 கோடியை டெபாசிட் செய்யும்வரை மலேசியாவில் தர்பார் படத்தை வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory