» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நித்யானந்தாவால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் : கதறும் இளம்பெண்... வீடியோ வெளியிட்டார்!!!

செவ்வாய் 7, ஜனவரி 2020 3:52:53 PM (IST)

சர்ச்சை சாமியாரான நித்யானந்தா தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் தனது விருப்பத்தின் பேரில் தான் நித்யானந்தாவுடன் இருப்பதாகத் தெரிவித்து வந்த நிலையில் தற்போது நித்யானந்தாவால் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தன்னைத் தானே சுவாமி என்று அறிவித்துக் கொண்ட நித்யானந்தா மீது பாலியல் தொல்லை, குழந்தை கடத்தல், பணம் வசூல் என பல்வேறு புகார்கள் அடுக்கப்பட்டுள்ளன. தனது இரு மகள்களை நித்யானந்தா அவரது ஆசிரமத்தில் சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மா என்பவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜனார்த்தனன் மகள்கள் லோபமுத்ரா, நந்திதா ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் நித்யானந்தா வசம் உள்ள இந்த இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் ஆன்லைன் மூலம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து வந்தனர்.

இதனிடையே லோபமுத்ரா அவ்வப்போது வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். அதில், ”நாங்கள் மேஜர், எங்களது விருப்பத்தின் பேரில் தான் இங்கு இருப்பதாகவும், நான் கடத்தப்படவில்லை என்று சொல்லிவிட்டேன். நான் கடத்தப்பட்டிருக்கிறேன் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், என்னிடம் பேச விரும்பினால் டிரினிடாட் அண்ட் டொபாக்கோ வந்து என்னைப் பார்க்கலாம்” என்று கூறி வந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு இங்கு ஆபத்து இருப்பதாகவும் தன்னை இங்கிருந்து மீட்டு செல்லுமாறும் கெஞ்சியுள்ளார். அடுத்த வீடியோவை பதிவு செய்யத் தான் உயிருடன் இருப்பேனா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜனார்த்தனன் மிரர் ஊடகத்திடம் கூறுகையில், இந்த வீடியோவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகக் கூறியுள்ளார். இதனிடையே நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் முருகானந்தத்தை மீட்டுத் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈரோட்டைச் சேர்ந்த அங்குலட்சுமி தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. முருகானந்தம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி சொந்த விருப்பத்தின் பேரில் தான் ஆசிரமத்தில் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory