» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜாமீனில் வெளிவந்தார் நெல்லை கண்ணன்: மகன் அழைத்துச் சென்றார்

சனி 11, ஜனவரி 2020 11:28:28 AM (IST)

பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெல்லை கண்ணன் ஜாமீனில் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த டிசம்பர் 29-ம் தேதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாகப் பேசியதாக நெல்லை கண்ணன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பேரில் போலீஸார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், நெல்லைக் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெல்லை கண்ணன் சனிக்கிழமை காலை 7 மணிக்கு விடுவிக்கப்பட்டார். அவரை அவரது மகன் சுரேஷ் அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

karnarajJan 11, 2020 - 09:26:43 PM | Posted IP 108.1*****

அரசியல் நாடகங்களை விட்டு விட்டு இலக்கிய மற்றும் ஆன்மீக பணிகளை தொடருங்கள்

MASSJan 11, 2020 - 03:30:22 PM | Posted IP 108.1*****

தொடரட்டும் உங்கள் இலக்கிய பணி ....................வாழ்த்துக்கள். வணக்கம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory