» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

திங்கள் 13, ஜனவரி 2020 12:47:54 PM (IST)தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயங்கி வருகிறது. தைத் திருநாளை முன்னிட்டு பொங்௧ல் விழா தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வங்கியின் இயக்குநர் அசோக், துணைத்தலைவர், வங்கியின் பொது மேலாளர்கள், துணை பொது மேலாளர்கள், உதவிப் பொது மேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 

வங்கியின் பெண் அலுவலர்கள் இணைந்து அழகிய வண்ணக் கோலங்களிட்டு பொங்கல் வைத்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கினர். விழாவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory