» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு : தமிழக அரசு அறிவிப்பு

திங்கள் 13, ஜனவரி 2020 3:15:08 PM (IST)

அரிசி ரேசன் கார்டுகளுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப கார்டு உள்ளவர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. கடந்த 9-ந்தேதி முதல் அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் பச்சரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், திராட்சை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கம் ஆகியவை வினியோகிக்கப்படுகிறது. நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் வாங்கி செல்ல வசதியாக தெரு வாரியாக பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. ஒரு கோடியே 97 லட்சம் பேர் அரிசி பெறக்கூடிய ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். பொங்கல் தொகுப்பு பெறுவதற்கு கடைசி நாளாகும்.

இதுவரையில் வாங்காதவர்கள், வெளியூர் சென்றவர்கள், முறையான ஆவணங்களை கொடுக்காமல் இருந்தவர்களுக்கு இன்று வழங்கப்படுகிறது. இன்று மாலை 6 மணி வரை பொங்கல் பரிசு வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசு வாங்காதவர்கள், ஜனவரி 21-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விடுபட்டவர்கள் பொங்கல் முடிந்த பிறகும் பொங்கல் பரிசை வாங்கலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory