» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளூர் கேபிள் சேனல்களில் தர்பார் படம் ஒளிபரப்பு : நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் கோரிக்கை!

திங்கள் 13, ஜனவரி 2020 3:18:23 PM (IST)

ரஜினி நடித்துள்ள தர்பார் படம் உள்ளூர் சேனல்களில் ஒளிபரப்பப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கடந்த வியாழன் அன்று வெளியானது. இந்நிலையில் தர்பார் படம் தமிழகத்தில் சில உள்ளூர் கேபில் சேனல்களில் ஒளிபரப்பப்படுவதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் புகார் தெரிவித்தார்கள். 

இந்த ட்வீட்டை முன்வைத்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், ட்விட்டரில் கூறியதாவது: இது அக்கிரமம். பைரசி உச்சத்தில் உள்ளது. பெரும்செலவு செய்து எடுக்கப்பட்ட தர்பார் படம் கேபிள் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது. தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். தர்பார் படம் வாட்சப் மற்றும் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதைத் தடுக்கவேண்டும் என்று லைகா பட நிறுவனம் தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டது. 

தர்பார் படம் வாட்சப்களில் பகிரப்பட்டு வருகிறது. யாரும் திரையரங்குக்குச் செல்லக்கூடாது. இதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட வேண்டும் என்கிற தவறான எண்ணத்துடன் வாட்சப்களில் தர்பார் படம் பகிரப்பட்டு வருகிறது. இது சட்டப்படி தவறானது. இதனால் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory