» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் திருநாளில் மத்திய நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு ஆய்வு : மு.க.ஸ்டாலின் கண்டனம்

திங்கள் 13, ஜனவரி 2020 3:23:55 PM (IST)

மத்திய நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு பொங்கல் கொண்டாடப்படும் நாளில் ஆய்வு செய்வது கண்டனத்திற்குரியது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலங்களில் பொங்கல் விடுமுறை நாட்களான ஜன.14, 15, 16 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு ஆய்வு செய்ய உள்ளது. இந்நிலையில் இக்குழு இன்று சென்னை வந்துள்ளது.  இக்குழு மத்திய அரசு அலுவலகங்களில் தனது ஆய்வை வரும் ஜன.14, 15,16 தேதிகளில் நடத்துகிறது.  இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

இது குறித்து அவர் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் "இந்தி மொழிப் பயன்பாடு" குறித்து ஆய்வு செய்ய, மத்திய நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் வருவது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழர்களின் தன்மான உணர்வுக்கும், மொழி உணர்வுக்கும், கலாச்சார மற்றும் பண்பாட்டு உணர்வுக்கும் மதிப்பளித்து, பொங்கல் விடுமுறை நாட்களில் நடைபெறும் இந்த ஆய்வை ரத்து செய்து, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவல ஊழியர்கள் நிம்மதியாக பொங்கல் திருநாளைக் கொண்டாட வழிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory