» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்து உத்தரவு

திங்கள் 13, ஜனவரி 2020 8:07:50 PM (IST)

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஜனவரி 21 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் மற்றும் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் குடும்பங்கள் ஆகியோருக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி -1 கிலோ, சா்க்கரை -1 கிலோ, 2 அடி நீள கரும்பு துண்டு - 1,திராட்சை, முந்திரி தலா 20 கிராம் மற்றும் ஏலக்காய் 5 கிராம் மற்றும் ரூ.1000 ரொக்கத் தொகையும் அனைத்து அரிசி பெரும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜன.9 முதல் ஜன.12 வரை விநியோகம் செய்யவும், விடுபட்ட அட்டைதாரா்களுக்கு ஜன.13 ஆம் தேதி விநியோகம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் பெறவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஜன.21 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.எனவே, விடுபட்ட அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் நியாய விலைக்கடை வேலைநாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையினை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory