» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாலியல் வழக்கில் சமூக ஆர்வலர் முகிலனுக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு

செவ்வாய் 14, ஜனவரி 2020 8:26:45 AM (IST)

பாலியல் வழக்கில் சமூக ஆர்வலர் முகிலனுக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தி சென்னை உயர்நீதி மன்றமதுரைக் கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் என்ற சண்முகம். ஜல்லிக்கட்டு ஆதரவு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ஆகிய எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரமாக செயல்பட்டார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த 2019 பிப்ரவரி 15-ல் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோவை வெளியிட்ட பின் முகிலன் மாயமானார். 

முகிலனை கண்டுபிடிக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனைவி ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து முகிலன் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே முகிலன் மீது குளித்தலையை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் பாலியல் புகார் அளித்தார்.  போலீஸார் முகிலன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்தனர்.  முகிலனை போலீஸார் தேடி வந்த நிலையில், மாயமான  ஐந்தரை மாதங்களுக்கு பிறகு கடந்த 2019 ஜூலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் கைது முகிலன் செய்யப்பட்டார்.

பாலியல் வழக்கில் முகிலனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நவம்பர் 11-ம் தேதி ஜாமீன் வழங்கியது. அப்பேது முகிலன் 2 நாளுக்கு ஒரு முறை கரூர் சிபிசிஐடி ஆய்வாளர் அலுவலகத்தில் காலை 10.30-க்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனையை தளர்த்தக்கோரி முகிலன் மனு தாக்கல் செய்தார்.  மனுவை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்றுவிசாரித்தார். 2 நாட்களுக்கு ஒரு முறை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை வாரம் ஒரு முறை நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என மாற்றம் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory