» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் அதிரடி சோதனை- மதுரையில் பரபரப்பு

செவ்வாய் 14, ஜனவரி 2020 12:05:59 PM (IST)

மதுரை பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள போலீஸ் கடுப்பாட்டு அறைக்கு மதுரையில் உள்ள பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தாக்குல்  நடக்கும்  என மர்ம போன்  வந்தது. இதை தொடர்ந்து  மதுரையில் உள்ள அனைத்து பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில்  வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். மேலும் போலீஸ் பாதுகாப்பும்  அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக மதுரையில் பரபரப்பு நிலவுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory