» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழர் வாழ்விற்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் வழங்கட்டும்: ஆளுநர் பொங்கல் வாழ்த்து

செவ்வாய் 14, ஜனவரி 2020 12:47:17 PM (IST)

தமிழர் வாழ்விற்கு மகிழ்ச்சியூட்டும் திருநாளாம் பொங்கல் மற்றும் சங்கராந்தியை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச்செய்தி : தமிழர் வாழ்விற்கு மகிழ்ச்சியூட்டும் திருநாளாம் பொங்கல் மற்றும் சங்கராந்தியை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கல் விழாவானது அறுவடையின் சிறப்பைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விற்கு மிகவும் உறுதுணை புரிகின்ற ஆற்றல், உயிர்ப்பு ஆகியவற்றை நமக்கு வழங்கிடும் சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

மேலும், வேளாண் மக்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றிடும் வகையில் எழுச்சியுடன் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தை திருநாளில், நாம் பெற்ற அளவற்ற அறுவடைக்காக இயற்கைக்கு நமது பிரார்த்தனைகளையும் நன்றியினையும் செலுத்துவோம். கொண்டாட்டம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியனவற்றை உள்ளடக்கிய பொங்கல் திருநாளின் தொடக்கமானது அனைத்து குடும்பங்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியையும், செழிப்பையும் அள்ளித்தர வாழ்த்துக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory