» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை : எச்.ராஜா ஆதரவு

ஞாயிறு 19, ஜனவரி 2020 10:41:41 PM (IST)

துக்ளக் விழாவில் பெரியார் பற்றி  நண்பர் ரஜினிகாந்த் பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை  என எச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.
.
துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், "பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், செருப்பு மாலை போடப்பட்டது” என்று கூறினார். ரஜினியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:- எந்த சலசலப்புக்கும் அவர் அஞ்ச மாட்டார். துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தப்பாக எதுவும் பேசவில்லை, திராவிடர் கழகம், வீரமணி, சுப.வி. போன்றவர்கள் இந்து விரோதிகள், இவர்களிடம் எந்த பகுத்தறிவும் கிடையாது. 1971-ம் ஆண்டு சேலத்தில் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை மாநாடு என்ற பெயரில் இந்து விரோத மாநாடு நடத்தப்பட்டது.

அதில் வேறு எந்த மதத்தையும் பற்றி பேசவில்லை. ரஜினி விழாவில் மேற்கோள் காட்டியது ஒரு சின்ன பகுதி மட்டுமே, தாங்கள் தொடர்ந்து மெய்களை பரப்ப கூடியவர்கள் என்று தி.க.வினர் நினைக்கிறார்கள். மேலும் துக்ளக் விழாவில் பேசியதற்காக  ரஜினியை மிரட்ட நினைக்கிறார்கள், எந்த சலசலப்புக்கும் அவர் அஞ்ச மாட்டார். இவ்வாறு அவர் கூறினார். எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஈ.வெ.ரா. தொடர்ந்து இந்து கடவுள் விக்கிரகங்களை உடைப்பது, இந்து கடவுள்கள் பற்றி இழிவாக பேசுவது போன்றவற்றை வாழ்நாள் முழுவதும் செய்தவர் தான். ஆகவே நண்பர் ரஜினிகாந்த் பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை’ என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

NARTHAJan 20, 2020 - 01:04:29 PM | Posted IP 162.1*****

அப்படியா ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory