» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓபிஎஸ் சகோதரர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

வியாழன் 23, ஜனவரி 2020 4:32:01 PM (IST)

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நியமிக்கப்பட்டதை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் அமாவாசை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆவின் விதிகளை மீறி ஓ.ராஜா மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதாகவும், தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுகவினரை மட்டும் நியமித்துள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செயல்பட இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.பி.எஸ். சகோதரர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆவின் விதிகளின்படி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படாததால் நியமனம் ரத்து செய்யப்படுவதாகவும், தற்காலிக அல்லது நிரந்தர நிர்வாகக் குழுவை அமைப்பதுபற்றி ஆவின் ஆணைய தலைவர் முடிவு எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory