» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஹெல்மட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு எமன் பாசக்கயிறு: போலீஸார் நூதன அறிவுரை

வியாழன் 23, ஜனவரி 2020 8:41:01 PM (IST)

திருச்சி மணப்பாறையில் சாலைப் பாதுகாப்பு குறித்து போக்குவரத்து போலீஸார், எமன் வேடமணிந்து தலைக்கவசம் அளித்து நூதனமாக அறிவுரை வழங்கியது அனைவரையும் கவர்ந்தது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஜனவரி 20-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை 31-வது சாலைப் பாதுகாப்பு வாரம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேல் தலைமையிலான போக்குவரத்து போலீஸார் பெரியார் சிலை திடலில் சாலைப் பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.

மணப்பாறை காவல் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் முன்னிலையில் ஹெல்மட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கியும், ஹெல்மட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு எமன் பாசக்கயிறுடன் விலையில்லா தலைக்கவசம் அளித்தும் போக்குவரத்து காவல்துறை நூதன விழிப்புணர்வு செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory